பாகிஸ்தானின் எல்லையோர மாகாணங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த ராணுவ வீரர்கள் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கைபர் பக்துங்க்வா மாகாணம் லோயர் டிர் பகுதியில் ராணுவத்தால் மிகவும் தேடப்படும் குற்றவாளியான ஹபீசுல்லா என்ற பயங்கரவாதி ஊடுருவியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் டைமர்கரா என்ற இடத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற ஹபீசுல்லாவை ராணுவ வீரர்கள் விரட்டிச் சென்றனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஹபீசுல்லா உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட ஹபீசுல்லா 2010-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலுடன் தொடர்புடையவர் ஆவார். எனவே அவரை பற்றி தகவல் அளிப்பவருக்கு சுமார் ரூ.15 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
