ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் நுழைவாயிலில் உள்ள பெயர்ப்பலகை மீது மர்ம நபர்கள் சிலர் வண்ணம் பூசி, அதனை சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசிடம் கண்டனத்தை பதிவு செய்ததாக கான்பெராவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரக அலுவலகங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக இந்து கோவில்கள் மற்றும் இந்திய தூதரகங்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பது அந்நாடில் வாழும் இந்திய சமூகத்தினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
