இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா- ஜெனோசன் ராஜேஸ்வர் ஆகிய இருவரும் இணைந்து இயக்கி வரும் ‘அந்தோனி’ எனும் திரைப்படத்தில் ‘கயல்’ வின்சென்ட் , டி.ஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யாழ்ப்பாண கடற்புற வாழ்வியலை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில், இலங்கை நடிகர்களான சுதர்சன் ரவீந்திரன், சவுமி நடித்துள்ளனர். ஒரே கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது . இதனை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பான வீடியோவை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் தொடங்கும் என்றும், விரைவில் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை வெளியிடுவோம் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
