இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் தற்போது நடிகராக அவரது 25வது படமான ‘கிங்ஸ்டன்’ எனும் படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் முதல் இந்திய கடலில் நடக்கும் அட்வென்ச்சர் ஹாரர் திரைப்படமாகும். இப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
இதற்கிடையில் இப்படம் கடந்த 7-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணத்தால் அந்த தேதியில் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் ‘கிங்ஸ்டன்’ படம் வெளியாகி உள்ளது. திரையரங்களை போல ஓ.டி.டி.யிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.