மாநிலங்களவை எம்.பி. ஆக ஜூலை மாதம் கமல்ஹாசன் பதவியேற்பார் என்று மநீம துணை தலைவர் தங்கவேல் தெரிவித்தார். வடகோவை பகுதியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய பின்பு மநீம துணை தலைவர் தங்கவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கமல்ஹாசனை மாநிலங்களவை எம்.பி. ஆக்குவது என மநீம நிர்வாகிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பு முடிந்து நாடு திரும்பியதும் ஜூலை மாதம் மாநிலங்களவை எம்.பி. ஆக கமல்ஹாசன் பதவியேற்பார்” என்று தெரிவித்தார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. சீட்டு ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
