வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் முதல் இந்தியாவில் தஞ்கம் அடைந்துள்ள ஷேக் ஹசீனா, அவ்வப்போது காணொளி வாயிலாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் அவர் பேசியதாவது: தனது அதிகாரப்பசிக்காக வெளிநாட்டு சக்திகளுடன் கை கோர்த்து தேசத்தை வீழ்ச்சி அடைய வைத்துள்ளார் முகம்மது யூனுஸ். வங்கதேசத்தின் சுதந்திர போராட்டம் தொடர்பான அனைத்து சின்னங்களும் அகற்றப்பட்டுள்ளன. சுதந்திர போராட்டக்காரர்கள் இழிவு படுத்தப்பட்டுள்ளார்கள். சுதந்திர போராட்டக்காரர்களின் நினைவுக்காக அனைத்து மாவட்டங்களிலும் வளாகங்கள் கட்டுப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் எரிக்கப்பட்டுள்ளன. முகம்மது யூனுஸ் இதை நியாயப்படுத்துகிறாரா? நீங்கள் நெருப்புடன் விளையாடினால், அதை உங்களையும் சேர்த்து எரித்து விடும் அதிக அளவு கடன் வாங்கும் அந்த நபர், அதிகார பசி, பண பசிக்காக, வெளிநாட்டு பணத்தை வைத்து நாட்டை அழிக்கிறார். வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத் இ இஸ்லாமி கட்சியை சேர்ந்தவர்கள் அவாமி லீக் தலைவர்களை துன்புறுத்துகிறார்கள்” இவ்வாறு அவர் பேசினார்.
