பார்க்கிங், லப்பர் பந்து என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். அவரது ‘டீசல்’ படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது. இவரது நடிப்பில் வெளியான, ‘பியார் பிரேம காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று இவரை மினிமம் கியாரண்டி நாயகனாக மாற்றியுள்ளது. மேலும் “நூறு கோடி வானவில், அந்தகாரம்” ஆகிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஹரிஷ் கல்யாணின் 15-வது படத்தின் பதிவேற்றம் வெளியாகியுள்ளது . அறிமுக இயக்குநர் வினீத் வரபிரசாத் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ஹரிஷ் கல்யாணும் நாயகியாக ப்ரீத்தி முகுந்தனும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. அதாவது இந்த படத்திற்கு ‘தாஷமகான்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழு இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.