அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் உலகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில் வாத்தி, லக்கி பாஸ்கர் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரியிடம் அடுத்த படம் குறித்து அஜித் குமார் ஆலோசித்தாக தகவல் கசிந்துள்ளது. இதனால் இருவரும் அடுத்த படத்தில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லூரி சூர்யாவின் 46ஆவது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கான முந்தைய வேலைகளில் மும்மரமாக உள்ளார். அதன்பிறகு அஜித் குமார் உடன் கைக்கோர்ப்பதற்கான திட்டத்தை தொடங்கலாம் எனத் தெரிகிறது. வெங்கி அட்லூரியின் வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.