‘ எனது தந்தையார் ரிஎம். சௌந்தரராஜன் அவர்களுக்கும் அவரது பாடல்களை தொடர்ச்சியாக மேடைகளில் பாடிவரும் எனக்கும் கனடா வாழ் தமிழ் ரசிகர்களும் உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழ் ரசிகர்களும் தொடர்ச்சியாக வழங்கி வரும் பேராதரவிற்கு எனது நன்றி’
15ம் திகதி செவ்வாய்க்கிழமை ஸ்காபுறோ நகரில் எக்ளிங்கரன்-கென்னடி சந்திப்புக்கு அருகில் அமைந்திருக்கும் TIMEOUT DINE IN AND TAKE OUT(416 265 5556) உணவக மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி ‘OLD IS GOLD’ மாபெரும் மெல்லிசை விழா.- தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் நெகிழ்ச்சியோடு உரையாற்றிய பிரபல பாடகர் மறைந்த ரிஎம். சௌந்தரராஜன் அவர்களின் புதல்வர் ரிஎம்எஸ். செல்வகுமார் தெரிவித்தார்.
மேற்படி சந்திப்பை திரு குரு யோகராஜா ஏற்பாடு செய்திருந்தார். கலைவேந்தன் கணபதி ரவீந்திரன் தொகுத்து வழங்கினார்.
உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் உட்பட பல ஊடகங்கள்-வானொலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கு மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். இங்குள்ள விளம்பரத்தைப் பார்த்து இரண்டு நாட்களில் ஒருநாளில் ரசிகர்கள் ‘OLD IS GOLD’ மாபெரும் மெல்லிசை விழாவை ரசித்து மகிழ அங்கு திரள வேண்டும் என அனைவரையும் அழைக்கின்றார் குரு யோகராஜா அவர்கள்- தொடர்புகளுக்கு416 5649642