1991 ஆம் ஆண்டு ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளியானது கேப்டன் பிராபகரன் திரைப்படம். இப்படம் விஜயகாந்திற்கு 100-வது திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. கேப்டன் விஜயகாந்துடன் மன்சூர் அலிகான், ரூபினி, லிவிங்ஸ்டன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இளையராஜா இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்தது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் படத்தை 4கே தரத்தில் மறு வெளியீடு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. மேலும் 2000 ஆண்டில் என்.மகாராஜன் இயக்கத்தில் வெளியான வல்லரசு திரைப்படத்தை படக்குழு மறு வெளியீடு செய்ய முடிவு செய்துள்ளது.திரைப்படம் வெளியாகி 25 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அதை கொண்டாடும் வகையில் மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த இரண்டு படங்களின் மறு வெளியீடு தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் கேப்டனின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர்.