கடந்த 2014 ஆம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியானது வீரம் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ப்ளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க விதார்த், பாலா, சந்தானம், நாசர்,பிரதீப் ரவாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொண்டார். திரைப்படம் வெளியாகி 11 வருடங்கள் நிறைவு பெற்றதையொட்டி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் மே 1 ஆம் தேதி படத்தை மறு வெளியீடு செய்கின்றனர். இதற்கான புது முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டது அதை இணையத்தில் அர்ஜுன் தாஸ் பதிவிட்டார். 11 வருடங்களுக்கு முன் இப்படத்தின் முன்னோட்டத்தை நான் அப்லோட் செய்தேன் அஜித் சாரின் நிறுவனத்திற்காக தற்பொழுது மீண்டும் அப்லோட் செய்கிறேன். என் வாழ்க்கை முழுமை அடைந்தது போல உணர்வை பெறுகிறேன்.” சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் குறிப்பாக அர்ஜுன் தாஸ் கதாப்பாத்திரத்தை மக்கள் பலரும் பாராட்டி இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
