(கனகராசா சரவணன்)
ஆண்களுக்கு சாரய குப்பிகளையும் பெண்களுக்கு அரிசியையும் வழங்கி வாக்கு கேட்பவர்களிடம் ஏமாந்து மீண்டும் 5 வருடம் பழைய ஒரு துப்பாக்கியமான நிலமைக்கு தள்ளப்படும் எனவே கிராமங்களிலும் ஊழல் மோசடியற்ற கட்டமைப்பை உருவாக்க வேண்டுமாக இருந்தால் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்பட்டவர்கள் பழைய தரப்பினரை நிராகரித்து திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களிக்கவும் என தேசிய மக்கள் சகக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்
மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் பெண் வேட்பாளர்களது; புதூர் மற்றம் திருச்செந்தூர் வட்டாரங்களினது காரியாலயம் அந்தந்த வட்டார தலைவிகள் தலைமையில் திறந்துவைக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்
ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு உள்ளுராட்சி தேர்தலில் ஏன் எங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என தெளிவாக தெரிவித்திருந்தார் தேசிய மட்டத்தில் ஊழல் மோசடிகளை இல்லாமல் செய்து சிறந்த ஒரு ஆட்சி கட்டமைப்பை உருவாக்கி கொண்டு வருகின்றோம் அதன்படி அரசியல் செயற்பாட்டையும் அரசாங்கம் என்ற ரீதியில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம்
எனவே கிராமங்களிலும் ஒரு ஊழல் மோசடியற்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமாக இருந்தால் இந்த தேர்தலில் போட்டியிடுகின்ற பழைய அதே தரப்பினருக்கும் மற்றும் குற்றவாளிகளாக நிர்ணயிக்கப்பட்டவர்கள் மீண்டும் வாக்களித்து நாங்கள் சந்தர்ப்பம் வழங்கப் போகின்றோமா? என்ற விடையத்தை முக்கியமாக கருத்தில் கொள்ளவேண்டும்.
இது ஊரை சுத்தப்படுத்துகின்ற முயற்சியாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் அமையப் போகின்றது எனவே தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் திறமையானவர்கள் எந்தவொரு ஊழல் குற்றச்சாட்டிலும் ஈடுபடாதவர்கள் சமூகத்துடன் ஒன்றினைந்து சேவையாற்றுபவர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது எதிராக போட்டியிடுபவர்கள் ஆண்களுக்கு சாரய குப்பிகளையும் பெண்களுக்கு அரிசியையும் கொடுத்து வாக்கு கேட்பவர்கள் எனவே அதனை வாங்கி ஏமாந்து மீண்டும் 5 வருடம் பழைய ஒரு துப்பாக்கியமான நிலமைக்கு தள்ளப்படும் நிமையிருக்கின்றது எனவே இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இப்படிப்பட்டவர்களை நிராகரித்து சிறப்பாக இந்த நாட்டையும் பிரதேசத்தையும் நேசிக்கின்றவர்களை சபைகளுக்கு அனுப்பவேண்டும் என்பது சிறந்ததாக அமையும்
இந்த பிரதேசமான திமிலதீவைச் சேர்ந்த தம்பி ஒருவர் வேட்பாளருக்கான விண்ணப்பத்தை என்னிடம் வழங்கினார் அவரின் விண்ணப்பம் இப்போதும் என்னிடம் இருக்கின்றது இவர் ஊர் ஊராக சென்று விண்ணப்பங்களை கொடுத்து தேர்தலில் போட்டியிடுகின்ற இவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை கருத்தில் கொண்டு இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
இவர்களின் நோக்கம் தாங்கள் பதவி ஒன்றை பெற்றுக் கொண்டு அதன் மூலமாக தங்களது சுயலாபத்தை மேற்கொள்வதற்காக அவர்கள் முயற்சி செய்கின்றனர் எனவே அவர்களை நிராகரித்து சிறந்த திசைகாட்டி சின்னத்துக்கு வாக்களிக்கவும் என்றார்.