அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் இந்தியாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை அவர் இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இதற்காக அமெரிக்காவின் 2-வது பெண்மணியான, அவருடைய மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களின் குழந்தைகளும் அவருடன் வருகிறார்கள். இதுதவிர, அந்நாட்டின் அரசு நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்களும் வருகின்றனர். இந்த பயணத்தில், 21-ந்தேதி டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து, டில்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் வான்சும், அவருடைய குழுவினரும் பங்கேற்பதுடன், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் மற்றும் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரங்களுக்கும் வான்ஸ் செல்கிறார். இதன்பின்னர் 24-ந்தேதி வாஷிங்டன் டி.சி.க்கு புறப்பட்டு செல்கிறார். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
