நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து சென்னை சாஸ்திரி பவன் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அதை மீறி நடத்தப்பட்டதால் நுங்கம்பாக்கம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட 214 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
