– முன்னாள் தவிசாளர் நிரோஷ் விசனம் தெரிவிப்பு
உள்ளூராhட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராhட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும் எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி பேசுவதனால் அவர் அதிகாரப் பகிர்வையும் ஜனநாயக ரீதியில் உள்ளுராட்சி தத்துவத்தையும் மீறுகின்றார் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் நிதி விடயத்தில் அந்தந்த சபைகளின் தலைவர்களுக்கே அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் தங்கி வாழும் நிறுவனங்கள் அல்ல. உள்ளூராட்சி என்பது ஆட்சி முறைமை. அது வரிகளையும் வருமானங்களையும் திரட்டுவதற்கும் தீர்மானிப்பதற்கும் செலவிடுவதற்கும் அதிகாரம் பொருந்திய சட்ட ரீதியான ஆட்சி அலகாகும்.
உள்ளூராட்சி மன்றங்கள் உலகளவில் வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பகிர்வைப் பெற்றுள்ளன. ஐனநாயக மற்றும் சட்ட ரீதியிலான அந்தஸ்தாக உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இலங்கையிலும் அரசியலமைப்புச் சட்ட சரத்துக்களின் ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் அதிகாரத்தினைப் பெற்றுள்ளன. சட்டரீதியில் உள்ளராட்சி மன்றங்கள் சோலைவரி, மாற்றம் ஆதனப் பெயர்மாற்றங்களின் போதான முத்திரைத் தீர்வை, நீதிமன்ற குற்றப்பணம், சேவைகளுக்கான அறவீடுகள், தண்டப்பணங்கள் என பல மில்லியன்களுக்கு உரித்தாளர்களாகவுள்ளன. வசதிக்குறைவான உள்ளூராட்சி மன்றங்களும் காணப்படுகின்றபோதும் அவ்வாறாக வசதிக்குறைவுக்கு மத்திய அரசின் எடுபிடியாக அல்லது ஆதிக்கத்தினுள் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பது தீர்வல்ல.
மத்திய அரசாங்கம் சர்வதேசத்திடம் பெறும் அதிக உதிவிகள் மக்களின் நலன்புரி விடயங்களை மையமாகக் கொண்டுள்ளன. அந் நிதி உதவிக்கான முன்மொழிவுகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சேவைப்பரப்புக்களாகக் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறுபட்ட சர்வதேச தாபனங்களிலும,; நாடுகளிலும் இருந்து மானியங்களைப் பெறுகின்றது. அவ் உதவிக் கோரிக்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய சேவைப்பரப்புக்களை காரணங்காட்டியே உதவிகள் பெறுகின்றன. அவ்வாறு அரசாங்கம் பெறும் உதவிகளை ஜனாதிபதி தனது கட்சிக்காரரின் சபைக்கு மட்டும் தான் கொடுப்பேன் எனக் கூற முடியாது. அவ்வாறு ஜனாதிபதி செய்தால் உதவிகளை சர்வதேசம் வழங்காது. அப்படி அரசாங்கம் செயற்பட்டால் இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச கொடையாளர்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல முடியும். அதனால் நாட்டிற்கான சர்வதேச உதவிகளே தடைப்பட்டுவிடும்;. சர்வதேச உதவி தடைப்பட்டால் அது மத்திய அரசாங்கத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும். வெளிநாட்டு உதவிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கு தேவை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பகிர்ந்தே ஆகவேண்டும்.
உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணியினருக்கான சம்பள விடயங்கள் மத்திய அரசு சார்ந்திருந்த போதும் அவற்றிற்கான மானிய உதவியை இன்றைய ஜனாதிபதி நினைத்தால் மாத்திரம் நிறுத்திவிட முடியாது. உத்தியோகத்தர்களின் நியமனம் மற்றும் சேவை அடிப்படையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் தொழில் உரிமையும் உள்ளது. ஆகவே அரசாங்கம் போதையில் பேசுகின்ற தெருச் சண்டியர்கள் போல விலாசம் எழுப்பக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.