அமெரிக்காவின் அலபாமா மாகாணம் கல்மேன் நகரில் உள்ள ஏரியில் உள்ளூர் அளவிலான மேஜர் லீக் படகுப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அதில் இரு படகுகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 3 மீனவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த ஒரு மீனவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து அந்த போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
