(கம்பளை நடராஜா)
(முன்னாள் பங்காளர்- ஏ.எஸ்.நாகலிங்கம்
பிள்ளை அன் சன்ஸ்-கம்பளை)
தோற்றம்: 09.04.1927 மறைவு: 05.03.2001
திதி: 09.03.2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி | திருமதி. நடராஜா இராசபூபதி
தோற்றம்: 14.12.1937 மறைவு: 23.04.2022
திதி: 19.04.2025
எம் நினைவைவிட்டு அகலாத அன்பான பெற்றோரே!
அப்பாவும் அம்மாவும் எம் காக்கும் தெய்வங்களாய் கண்டு நாம்
அனுபவித்த வாழ்க்கை அப்பா மறைந்த நாளன்று இருண்டது
இருபத்திநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இழந்த தலைவா
நீங்கள் இல்லா நெடும் பயணம் இன்னும் கனக்கிறது அப்பா
கண்டிப்பும் கண்ணியமும் கொண்டவராய் எம்மை தாங்கினீர்கள்
காசு பணம் பாராது எமக்கு கல்வியறிவு ஊட்டினீர்கள்
உங்கள் பண்புகள் பற்றி தொடர்ச்சியாய் அம்மா புகழ்ந்திடும்
புனிதர் நீங்கள். உங்கள் நினைவுகளோடு
நாம் தொடர்ந்து வாழ்வோம்!
எம் இதயத்தில் என்றும் நிறைந்தவராய் திகழ்ந்தீர்களே அம்மா
இன்றோ நாம் தவித்து நிற்க இறைவனடி சென்று உறைகின்றீரோ!
எம் அப்பாவை ஆண்டுகள் பல முன்பே பறிகொடுத்து பதறி நிற்க
என்றும் எமக்கு அன்பையும் ஆறுதலதையும் அளித்த தெய்வமே
பெற்றவளாய் மாத்திரம் நீங்கள் எம்மை வளர்க்கவில்லை
பொறுப்புள்ள காவல் தெய்வமாய் காத்து நின்றீர்கள்
உற்றவராய் இவ்வுலகில் உடனிருந்த உத்தமியே
உம் பிரிவு எம்மை வாட்டிநிற்க எப்படி நாம் வாழ்வது இங்கு!
விழிகள் நீர் சொரிய இதயம் இமயமாய்க் கணக்க, உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து நிற்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டன்
தகவல்: மகன்மார்
கோகிலராஜா 647-338-6308
ஸ்ரீறஞ்சன் 44 7908 758991
கிருபாகரன் 33 618 010507