கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் ரெட்ரோ. இதில் பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஸ்வாசிகா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா பேசியதாவது: நான் சினிமாவிற்கு வந்து 25 வருடங்களுக்கு மேலாகிறது. உங்களின் இந்த அன்பு இருந்தால் போதும் எப்பொழுதுமே நான் நன்றாக இருப்பேன். வாழ்க்கை எப்போதுமே அழகானது. வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையை நம்பினால் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும். வாய்ப்பு வரும்போது அதை தவற விட்டு விடாதீர்கள். அனைவருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் தான் வாய்ப்பு வரும். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொண்டால் எல்லாருமே ஜெயிக்கலாம். அனைவருக்குமே அழகான வாழ்க்கை இருக்கும். நடிகராக இருந்த என்னை ஜெயிக்க வைத்து அகரம் என்ற பவுண்டேஷனை ஆரம்பிக்க உத்வேகம் கொடுத்தது நீங்கள் தான். நான் தனி ஆளாக செய்யவில்லை. நீங்கள் கொடுத்த உத்வேகத்தால் தான் பண்ண முடிந்தது. தற்போது அகரம் பவுண்டேஷன் மூலம் 10 ஆயிரம் தம்பிகள், தங்களை பட்டதாரி ஆகி இருக்கிறார்கள். இன்னும் பல பேர் இதன்மூலம் பயனடைவார்கள் என தெரிவித்தார்.