இந்தியா, பிரான்ஸ் இடையே 2016ம் ஆண்டு ரபேர் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை இந்தியா கொள்முதல் செய்தது. இதனிடையே, பிரான்சிடமிருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது. இந்த போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் வரும் 28ம் தேதி கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரான்ஸ் மந்திரி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா வர உள்ளார். டெல்லியில் பாதுகாப்புத்துறை தலைமையிடத்தில் ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாக உள்ளது. இந்த போர் விமானங்கள் கடற்படையுடன் இணைக்கப்பட உள்ளன. இந்த ஒப்பந்தம் உறுதியாகும்பட்சத்தில் இந்தியாவில் உள்ள ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும்
