காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரண்டு நாட்கள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், அதிகாலை அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றடைந்த அவருக்கு விமான நிலையத்தில் காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
