இலட்சியப் பயணத்தில் வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாட்டின் உள்ளடக்கிய வளர்ச்சி தொடர்ந்து சொல்லப்பட வேண்டிய ஒன்று. நமது வரலாறு நாளைய மக்களின் மனதை வடிவமைக்க வேண்டும். பொய்களை அழித்து, உண்மையைத் தேடுபவர்களையும் மாற்றத்தை உருவாக்குபவர்களையும் வழிநடத்த உண்மை பேசப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வெற்றியை உரக்கச் சொல்வோம்! இலட்சியப் பயணத்தில் வெல்வோம் என தெரிவித்துள்ளார் .