கருகம்பனை தமிழ் மன்றம் சனசமூக நிலையம், கருகம்பனை இந்து இளைஞர் கழகம், கருகம்பனை இந்து இளைஞர் விளையாட்டு கழகம் மற்றும் விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஆகியன, நாளைய அதிகாரத்தின் எழுச்சி அமைப்பின் அனுசரணையோடு முன்னெடுத்த 26வது மாபெரும் இரத்ததான முகாம் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்றையதினம் நடைபெற்றது.
கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்த இரத்த தானமுகாமில் 43 குருதிக்கொடை பாளர்கள் குருதி வழங்கியிருந்தனர்.
இவ் குருதிச்சேகரிப்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியினர் ஈடுபட்டனர். இதன் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி வைத்தியர் நந்தினி, பொது சுகாதார பரிசோதகர், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது குருதிக்கொடையாளர்கள், கிராமத்தவர்கள், விதையனத்தும் விருட்சமே உறுப்பினர்கள், நாளைய அதிகாரத்தின் எழுச்சி அமைப்பின் உறுப்பினர்கள், இராணுவத்தினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.