நீ
நாளை வா
என்றான் லோபி
நீ
காலத்தை
வென்று விட்டாய்
என்றான் ஞானி.
சில
வாய்கள் அகில் போல்
மணக்கிறது ஆனால்
வார்த்தை மட்டும்
கால்வாயாய் நாறுகிறது.
முயலையும் ஆமையையும்
ஒன்று குழைத்துச் செய்த
குணத்திலே தங்கிவிடுகிறது
இங்கு பலரது வாழ்க்கை.
நீண்ட தொல்
நினைவுகளில்
நிம்மதி காண்கிறேன்
மாண்டு போன மழலையினை.
உன்னைக் கடந்து
செல்லவே நினைக்கிறேன்
தொடர்ந்து வருகிறது நிழல்.
கோ. தனுசன்.
மட்டக்களப்பு, இலங்கை.