தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இவர் தற்போது இயக்குனர் மணி ரத்னம் இயக்கியுள்ள “தக் லைப்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து, அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது நடிகர் சிம்பு ‘தக் லைப்’ படத்திற்கான புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் ‘தக் லைப்’ படம் தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு திருமண வாழ்க்கை என்பது எப்படி இருக்க வேண்டும் என்ற தனது கருத்தை மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, “திருமணம் என்பது பிரச்சினை இல்லை, மக்கள்தான் பிரச்சினை. இன்றைய காலகட்டத்தில் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை மிகவும் குறைந்துவிட்டது. நீ இல்லையென்றால் வேறொருவர் என்ற மனநிலை அதிகமாக இருப்பதாக நினைக்கின்றேன். அப்படி இருக்க கூடாது. சரியான நேரம் வரும்போது, உங்களுக்கான சரியான நபர் கிடைக்கும்போது திருமணம் செய்துகொண்டால் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
