தமிழக அரசு சார்பில் சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிபருக்கும் காலக்கெடுவை உச்சநீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவிட்டது. அதாவது, மசோதா மீது 3 மாதங்களுக்குள் அதிபர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை துணை அதிபர் ஜெகதீப் தன்கர் விமர்சித்து இருந்தார். இந்நிலையில், டில்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அதிபர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை. இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் இரு விதமான கருத்துகளை கூறுகிறது. நமது மவுனம் ரொம்ப ஆபத்தானது. சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் நமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது என தெரிவித்தார்.
