விஜய் சேதுபதி மற்றும் ஷாஹித் கபூர் இணைந்து நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது ஃபார்ஸி வெப் தொடர். இத்தொடரை ராஜ் & டிகே இருவரும் இணைந்து இயக்கினர். இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும். இத்தொடரே ஷாஹித் கபூர் நடித்த முதல் வெப் தொடராகும். இத்தொடரில் விஜய் சேதுபதி காவல் அதிகாரியாகவும், ஷாஹித் கபூர் மற்றும் அவரது நண்பரும் கள்ள நோட்டு அடித்து அதனை வியாபாரம் செய்யும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பர். முதல் சீசன் முடிவில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இடையே சண்டை வலுக்கும் மேலும் கதையின் முக்கிய வில்லனான மன்சூர் தலாலை வைத்து முடியும், அடுத்த சீசனுக்கான தொடக்கத்தையும் அங்கு கொடுத்திருப்பர். இந்நிலையில் ஃபார்சி பாகம் சீசன் 2 பற்றிய தகவல் கிடைத்துள்ளது. ஃபார்ஸி 2 தொடரின் வரும் டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு நடுவில் ஃபார்ஸி சீசன் 2 வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராஜ் மற்றும் டிகே தற்போது ராக்த் ப்ரம்மாந்த் வெப்தொடரை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
