ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா, ஈரான், சவுதி அரேபியா, இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்தி மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு. எங்கள் இதயங்கள் உங்கள் அனைவருடனும் உள்ளன என பதிவிட்டுள்ளார்.
ரஷிய அதிபர் புதின் வெளியிட்டுள்ள கண்டன் அறிக்கையில், இது ‘எந்த நியாயமும் இல்லாத ஒரு கொடூரமான குற்றம்.’இந்த மிருகத்தனமான குற்றத்திற்கு எந்த நியாயமும் இல்லை.’பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ரஷியா தொடர்ந்து வழங்கும் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வதற்கான இந்தியா முயற்சிகளில் அதன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ‘ குற்றவாளிகள் தகுந்த தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ இறந்தவர்களின் நெருங்கிய மற்றும் அன்பானவர்களுக்கு உண்மையான அனுதாபத்தையும் ஆதரவையும் தெரிவிக்கவும், காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக புதின் கூறியுள்ளார்.
























