காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு இழப்பீடு அறிவிப்பித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
