(கனகராசா சரவணன்)
ஜே.வி.பி.யை பிழையென்று பிரசாரம் முன்னெடுக்கும் தமிரசுக்கட்சி ஜே.வி.பி.யின் ஒற்றை ஆட்சிக்கு ஆதரவு வழங்குகின்றது. அவ்வாறானால் ஜே.வி.பி. பிழையென்றால் ஜே.வி.பி.யின் கொள்கையினை பின்பற்றிச் செல்லும் தமிழரசுக்கட்சி சரியா ? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து இம்முறை கிழக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுது.
இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் பேரவையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு தெரிவித்தார்.
இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களை தமிழ் தேசிய நிலைப்பாட்டிலிருந்து விலகவைத்துள்ளதாக இலங்கையில் உள்ள தூதரகங்கள் கூறிவருகின்றன. அதற்கு பலவிதமான பதில்களை சொல்லி வருகின்றோம்.
மக்கள் சக்தி என்ற பெயரில் ஆட்சி செய்கின்ற ஜே.வி.பி. என்கின்ற அமைப்பு வடகிழக்கில் தமிழ் மக்களின் ஆணையைப் பெறவில்லையென்பதை தெளிவாக கூறிவருகின்றோம்.
அடுத்த தேர்தலில் தமிழ் மக்கள் தங்களது தமிழ் தேசிய கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்கள் என்பதை தெளிவாக வெளிப்படுத்தச் சொல்லுங்கள் என்று எங்களிடம் பல்வேறு நாட்டின் தூதரகங்கள் கோரியுள்ளன.
ஜே.வி.பி.யினர் தெற்கில் 70 வீதமான வாக்கினைப் பெற்றவர்கள். அதே அலை வடகிழக்கின் தமிழர் தாயப் பகுதியிலும் கூட அவர்களுக்கான ஆதரவு கிடைத்திருக்கலாம் என்பதில் நியாயமுள்ளது. அதனை முறியடிக்கும் பொறுப்பு எங்களிடமே இருக்கின்றது
தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் விட்ட தவறை உணர்ந்து அடுத்த தேர்தலிலே தமிழ் தேசிய நிலைப்பாட்டை நிலைநாட்டக் கூடிய வகையிலே வாக்குகளை பயன்படுத்த வேண்டும்
கடந்த தேர்தலில் எங்களுடைய மக்கள் தவறுதலாக எங்கள் மக்கள் வாக்குகளை பயன்படுத்தி ஜே.பி.பி என்ற இந்த இனவத கட்சிக்கு ஏதே ஒரு வகையில் தமிழ் மக்கள் ஆணை கொடுத்திருக்கின்றனர் என்ற அந்த தவறான படத்தை திருத்துவதாக இருந்தால் நடைபெறலுள்ள இந்த தேர்தலில் அந்த பிழையான காட்சியை திருத்த வேண்டும.;
இந்த ஜே.பி.வி யை பிழையான தவறாக ஏன் கூறுகின்றோம் என ஆழமாக விளங்கி கொள்ள வேண்டும் மற்;ற சிங்கள கட்சிகள் தமிழ் பகுதியில் வந்து வாக்கை பெறுவதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் ஏன் என்றால் அவர்கள் வெளிப்படையாக இனவாத நிகழ்சி நிரலை கொண்டவர்கள் என அனைத்து தமிழ் மக்களுக்கு தெரியும் அதைவிட தென்தமிழீழ மக்களுக்கு நன்றாக தெரியும்
தமிழ் தாயகத்தை இன்று கேள்விக்கு உட்பட்ட சூழ்நிலையில் வாழ்வதாக இருந்தால் அது தென்தமிழீ மண்ணில் வாழுகின்ற மக்களுடைய நிலமை அதற்கான அடிக்காரணம் இந்த மண்ணைதான் திட்டமிட்ட வகையிலே மாறிவந்த ஜக்கிய தேசிய கட்சியாக இருக்கலாம் ஸ்ரீ சுதந்திர கட்சி மற்றும் ஏனைய சிங்கள கட்சிகள் உட்பட பலகட்சிகள் இணைந்து கடந்த 76 வருடமாக சிங்கள மயமாக்கல் பௌத்த மயமாக்கல் மூலம் கிழக்கு மாகாணத்தை திட்டமிட்ட வகையில் அழித்துள்ளனர்
இது அனைத்தும் அபிவிருத்தி என்ற பேரிலே கல்லோயா திட்டம், மகாவலி திட்டம், தற்போது மாதுறு ஓயா திட்டம் என்பன திட்டமிட்ட வகையில் அபிவிருத்தி என தெரிவித்து தெற்கு சிங்கள மக்களுக்கு இலாபம் கொடுக்கும் வகையில் அவர்களை கொண்டுவந்து குடியேற்றி மாற்றியமைக்கும் திட்டத்தை செய்துள்ளனர்.
இந்த 76 வருடத்தில் ஜே.வி பி ஒருநாளும் நாட்டை ஆட்சி செய்ய வில்லை எனவே அவர்களைபற்றி பெரியளவில் தெரியாது அதனால் தெற்கில் ஒரு அலையடிக்க அந்த அலையைப்பார்த்து ஒரு சிலராவது இதுவரைக்கும் ஜே.வி.பிக்கு வாக்களிக்காத வடகிழக்கு மணில் வாக்குகள் வீழ்ந்தது இது உண்மை என்றார்.