மூளாய், பொன்னாலை கிராமங்களில் 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும், சோட்டோகான் கராத்தே போட்டியில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டி சர்வதேச போட்டிக்கு தெரிவான மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு 23ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் நடைபெற்றது
அத்துடன் மூளாயில் உள்ள மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தில் முதலாவது தையல் பயிற்சி நெறியினை நிறைவு செய்த மாணவர்களினால் உருவாக்கப்பட்ட தையல் பொருட்களின் கண்காட்சியும் நடைபெற்றது.
மூளாய் வதிரன்புலோ விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன பின்னர் விருந்தினர்களும் மாணவர்களும் மூளாய் வதிரன்புலோ ஆலயத்தில் இருந்து மண்டபம் வரை மங்கல வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து விருந்தினர்களது உரை, மாணவர்களது கலை நிகழ்வுகள், மாணவர்களுக்கான கௌரவிப்பு போன்றன இதன்போது இடம்பெற்றன.
மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.