கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம். இவர் தற்போது எஸ். பிரேம் ஆனந்த் எழுதி இயக்கும் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் மே 16-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதாவது, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள ‘எஸ்டிஆர் – 49’ படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார். சிம்புவும், சந்தானமும் இணைந்து ஏற்கனவே ‘வாலு, வானம், ஒஸ்தி, சிலம்பாட்டம்’ போன்ற பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், நடிகர் சந்தானம் சமீபத்திய பேட்டிய ஒன்றில் ‘எஸ்டிஆர் 49’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அதாவது, ஒரு நாள் சிம்பு சார் எனக்கு போன் பண்ணி என்னுடைய படத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். சிம்பு கேட்டால் முடியாது என்று சொல்ல முடியுமா?, அவர் கேட்டால் எப்போதும் சரி மட்டும் தான்” என்று கூறி ‘எஸ்டிஆர் 49’ படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
