“விதையனைத்தும் விருப்பமே” செயற்றிட்டம் ஊடாக ஜேர்மனி நாட்டில் வசிக்கும் கிறிஸ்டோபர் செல்வஸ்டீபன் அவர்களின் 23 வது பிறந்தநாளை முன்னிட்டு 23ம் திகதி புதன்கிழமை அன்றையதினம் மலரும் மூளாய் அமைப்பினரினால் தெரிவு செய்யப்பட்ட கற்றல் மற்றும் விளையாட்டு துறையில் சிறந்த விளங்குகின்ற வறிய மாணவர்கள் 15பேருக்கு சப்பாத்துகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி விக்னராசா கலந்து கொண்டு மேற்குறித்த உதவித் திட்டத்தில் அடங்கும் பொருட்களை வழங்கினார்.