கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க சட்டசபையில் சிறப்பு கவனம் ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு திமுக கட்சியை சேர்ந்தவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், “எல்லா திறமையும் பெற்ற ஒரு தலைவராக ஆளுமையாக வாழ்ந்தார். இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஜனநாயகத் தலைவர் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார். ஜி.கே மணி பேசுகையில், எல்லா தலைவர்களின் பெயர்களிலும் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. கருணாநிதி பெயரிலும் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன். என்றார். இதையடுத்து சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில், “கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கலைஞர் பெயரால், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதை எவ்வித தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன். தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு கலைஞர் காரணம். அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்” இவ்வாறு முதல்-அமைச்சர் பேசினார்.