மார்க்கம் நகரில் சமூகச் செயற்பாட்டாளர் Deepal Talreja அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற ‘உலக பூமி தினம்’ கொண்டாட்டம் சார்ந்த ‘சுத்திகரிப்புத் திட்டம்
கடந்த பல வருடங்களாக மார்க்கம் நகரில் சமூக மற்றும் அரசியல் நிகழ்வில் எப்போதும் சமூகமளித்து தீவிரமான செயற்பட்டும் தமிழ்ச் சமூகத்தோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டவருமான சமூகச் செயற்பாட்டாளர் Deepal Talreja அவர்களால் ஏற்பாடு செய்யப்பெற்ற ‘உலக பூமி தினம்’
கொண்டாட்டம் சார்ந்த ‘சுத்திகரிப்புத் திட்டம் கடந்த சனிக்கிழமை 19ம் திகதி மதியத்திற்குப் பின்னர் நடைபெற்றது.
மார்க்கம் நகரில் உள்ள Riverwalk Park அமைந்துள்ள வட்டாரத்தைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த அரிய சுத்திகரிப்புத் திட்டத்தை மக்கள் அனைவரும் பாராட்டினார்கள்.
மேற்படி நிகழ்வில் உதயன் பத்திரிகை மற்றும் தேசம் மாத இதழ் ஆகியவற்றின் சார்பில் பலர் கலந்து கொண்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் அத்துடன் மார்க்கம் முதியோர் மன்றம்- பொக்ஸகுரூவ் முதியோர் மேம்பாட்டு மன்றம்-கிறீன்பொறொ முதியோர் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் சார்பிலும் அங்கத்தவர்கள் கலந்துகொண்டு Deepal Talreja அவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த சுத்திகரிப்புத் திட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் திருப்தியுடன் வீடு சென்றனர்