மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும் என்கிறார் தமிழ் தேசிய கட்சி தலைவர் சிறிகாந்தா
(கனகராசா சரவணன்)
தமிழரசு கட்சி மைத்திரிபால சிறிசேன காலத்தில் எவ்வாறு செயற்பட்டார்களே அவ்வாறே ரணிலுக்கு ஆதரவாக செயற்பட்டது போல அனுரகுமார அரசாங்கத்துடன் இரகசியமான ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலே செயற்பட தொடங்கியுள்ளதுடன் ஜே.வி.பி தமிழ் எம்பிக்களின் பேச்சாளர்களாக சிலர் இயங்கி வருகின்றனர். எனவே எம்.சுமந்திரன் கட்சியில் இருக்கும் வரையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை எதிர்பார்க்க முடியாது மக்கள் சிந்தித்து செற்பட வேண்டும். என தமிழ் தேசிய கட்சி தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதியில் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் களுவன்கேணியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி மற்றும் தமிழ் மக்கள் பேரவை என்பன இணைந்து சைக்கிள் சின்னத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் கடந்த 22ம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுது.
இதில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிரேஸ்ட சட்டத்தரணி ந.சிறிகாந்தா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி சுகாஸ் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். இதன்போது உரையாற்றிய நல்லதம்பி சிறிகாந்தா இவ்வாறு தெரிவித்தார்
இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து திட்டம் தீட்டி தொடர்ச்சியாக செயற்பட்டு வந்த பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கங்களை விட இப்போது அனுரா குமார திசநாயக்கா தலைமையில் இயங்கி கொண்டிருக்கின்ற தேசிய மக்கள் சக்தி என அழைக்கப்படுகின்ற ஜே.வி.பி அரசாங்கம் மிக தீவிரமாக இராஜதந்திர ரீதியாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
ஜே. ஆர் ஜெயவர்தன, பிறேமதாஸா, மகிந்த ராஜபக்ஷ, சந்திரிக்கா யார் என்பது மக்களுக்கு தெரியும் ஆனால் இப்போது வந்திருக்கின்ற இந்த ஜனாதிபதி இனவாதத்தின் அழகு முகமாக தமிழ் மக்களை வழைத்துப் போடலாம் என திட்டம் தீட்டி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கடந்த பொது தேர்தலிலே சிங்கள மக்களின் அதிக வாக்குகளால் ஆட்சிக்கு வந்த இவர்கள் தமிழ் மண்ணில் தேர்தல் நுணுக்கங்களையும் நுட்பங்களையும் பயன்படுத்தி சில ஆசனங்களை பெற்று கொண்டிருக்கும் சூழ்நிலையலே உலகத்துக்கு பாருங்கள் உள்ளுராட்சி முடிவுகளை நாங்கள் கனிசமான ஆசனங்ககளை வென்றிருக்கின்றோம் என காட்டமுடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களது வேட்பாளர்களை தமிழ் மாநிலம் முழுவதும் நிறுத்தியுள்ளனர்.
இலங்கையின் முதல் பிரதமர் டட்லிசேனநாயக்கா, டட்லி, சேர்ஜோன் கொத்தலாவ, மற்றும் சிங்கள சட்டத்தை கொண்டு வந்து இந்த நாட்டிலே தமிழர்களுக்கு அடிபோட்டு உதைபோட்ட பண்டாரநாயக்கா அரசாங்கம் அதன் பின்னர் ஆட்சி செய்த அனைவரும்; பௌத்த சிங்கள பேரினவாதத்தை முழு இலங்கை தீவையும் அரசியல் ரீதியாக கொண்டுவருகின்ற ஒரே நிகழ்சி நிரலில் செயற்பட்டனர்.
அந்த நிகழ்சி நிரலை இப்போதைய அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது இதை தோற்கடிக்க வேண்டும் எனவே எங்கள் தீர்ப்பு எங்கள் முடிவு உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தீர்க்கமாக தெரிவிக்கப்பட வேண்டும். என்பதற்காக தமிழ் மக்கள் பேரவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சைக்கிள் சின்னத்தில் தமிழ் ஈழம் முழுவதும் சிங்கள இனவெறி கும்பலின் வேட்பாளர்களுக்கு எதிராக சுயமரியாதை கொண்ட தமிழர்களான ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் களத்தில் இறக்கியுள்ளோம்.
இது ஒரு சத்திய போராட்டம் இந்த போரட்டத்தில்; எங்களுடன் இணைந்திருக்க வேண்டிய தமிழ் கட்சிகள் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக தனித்து போட்டியிடுகின்றனர் காலப்போக்கிலே இந்த கொடியின் கீழ் வருவார்கள.; ஆனால் தமிழரசு கட்சி கடந்த தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கின்றோம் என்று மார்தட்டிக் கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் இந்த தேசிய மக்கள் சக்தியில் தமிழர்களாக போட்டியிட்டு தெரிவாகியவாகிய எம் பிக்களை அரசாங்கம், ஜனாதிபதி, மந்திரிகள் கண்டு கொள்ள வில்லை அவர்கள் குறைகளை அல்லது கோரிக்கைகளை நேரடியாக அரசாங்க தரப்பிடம் சமர்ப்பிக்க முடியாமல் திண்டாடுகின்றனர் எனவே அவர்களுக்காக நாங்கள் அவர்களுடைய கோரிக்கையை அரசாங்கத்துக்கு எடுத்து சொல்ல வேண்டியுள்ளது என பேசினார் இது எவ்வளவு வெட்ககேடு.
எமது மக்களுக்காக பேச வேண்டியவர்கள் இன்று தமிழர்களின் தேசிய அபிலாசைகளுக்கு எதிரா செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சிங்கள இனவாதிகளின் எடுபிடிகளான இந்த ஜே.வி.பி தமிழ் எம்பிக்களுக்கு பேச்சாளர்களாக தமிழரசு கட்சி சில உறுப்பினர்கள் இயங்கி கொண்டிருக்கின்றனர் எவ்வளவு வெட்கம் கெட்ட நிலமை யாருடைய சார்பிலே இப்போது அரசாங்க தரகர்களாக சிங்கள இனவெறிக்கும்பலின் எம்பிக்களின் பேச்சாளர்களாக தங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
இவர்கள் அரசியல் தரகர்கள் இவர்களை நம்பி எமது மக்கள் வாக்களிக்கின்ற போது ஒவ்வொரு வாக்கும் உரிமைக்காக உணர்வுக்காக விடுதலைக்காக அளிக்கப்படுகின்றது ஆனால் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் இன்று தமிழரசு கட்சி தமிழ் மக்களின் அரசில் கோரிக்கையை வலியுறுத்துகின்ற உரிமையை இழந்துள்ளது அவர்;களது கோரிக்கை எல்லாம் தமிழ் இனத்தின் விடுதலை அல்ல.
நாங்களும் நீங்களும் அர்தமற்றுப் போய்விட்டது என கருதுகின்ற இந்திய இலங்கை 13 வது திருத்தத்தை பேசுகின்றனர் இந்த ஒப்பந்தம் தொடர்பாக இலங்கைக்கு இந்தியா தலைவர்கள் வரும் போது அதனை அமுல்படுத்துமாறு கோரியதாக ஊடகங்களில் சொல்லிவிட்டு போகின்றனர். அது என்ன நடக்கின்றது இலங்கை அரசு ஒரு காதால் கேட்டு மறு காதால் விட்டுவிடுகின்றனர்.
இந்தியா விரும்பினால் இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த நிர்ப்பந்திக்க முடியும் அதை இந்தியா செய்யமாட்டாது 13 வதை பேசி பேசியே தமிழ் மக்களின் காலம் நீர்த்து போகும் என இந்தியா கணக்கு போடுகின்றது இது யதார்தமான நிலமை
தமிழரசு கட்சி ஆளும் அரசாங்கத்தினுடைய ஏவல் படையாக மாற்றிக் கொண்டிருக்கின்றது இந்த பின்னணியில் தான் தமிழ் மக்களின் அடிப்படை இலச்சியத்தை குறிக்கோளை வலியுறுத்த கூடிய எங்களுக்கு ஒரு உறுதியான அரசியல் தலைமை தேவைப்படுகின்றது என உணர்ந்த காரணத்தினனால் நாங்கள் எல்லோரும் ஓர் அணி திரண்டுள்ளோம்.
நாங்கள் எல்லோரும் அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ் மக்கள் விடுதலையை விரும்புவது உண்மை என்றால் ஓர் அணி திரண்டு தமிழ் மக்கள் விடுதலை பெறவேண்டும் என்ற உறதியான நிலைப்பாட்டில் நிற்கின்றனர் என்பதை கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்பத்திலும் உலகம் அறிய உரத்து சொல்லவேண்டும். அதற்கான சந்தர்பம் தான் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலை தமிழ் தேசி பேரவை பார்கின்றது.
கடந்த தேர்தலில் தட்டி தவறி கிடைத்த சில ஆசனங்களை வைத்து தமிழ் மக்கள் மாறிவிட்டதாக வெளி உலகத்துக்கு காட்டுகின்றது சுமந்திரனுடைய காருக்கு ஒரு சின்ன பிரச்சனை நடந்தால் அன்றைய ஜனாதிபதி மகிந்த விசாரிப்பார் சுமந்திரன் தமிழினத்தின் சாபக்கேடு அவரை கொண்டு வந்த சிலர் இன்று உயிரோடு இல்லை
கடந்த தேர்தலில் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னர் கூட தமிழரசு கட்சியை தொடர்ந்து நாசப்படுத்தி கொண்டிருக்கின்றார் அவர் தமிழரசு கட்சியில் இருந்து ஆட்டம் போடும்வரை நீங்களும் நாங்களும் எதையும் எதிர்பார்க முடியாது அந்த நிலமை மாற்றப்படக் கூடுமா என்பதை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தமிழரசு கட்சிக்கு எதிராக இந்த தேர்தலிலே வாக்குகள் விழுமாக இருந்தால் அந்த நிலமை மாறும் என்றார்.