கடந்த சில வருடங்களாக திருமதி சத்தியா சுரேஸின் நிர்வாகத்தில் இயங்கிவரும் Sai Autism Learning Centre நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த ஏப்ரல் 21ம் திகதி திங்கட்கிழமை மாலை 85 என்னும் விலாசத்தில் அமைந்தள்ள கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள அலுவலகம் மற்றும் வகுப்பறைகள் ஆகியவை கொண்ட இடம் நகருக்கு மத்தியில் அமைந்துள்ளது.
மேற்படி திறப்பு விழாவிற்கு ரொறன்ரொ கல்விச் சபையின் தலைவர் நீதன் சண்முகராஜா மற்றும் உறுப்பினர் திருமதி யாழினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்கள் சிறப்புரைகளை ஆற்றினார்கள்.
நிறுவனத்தில் கற்றலையும் பராமரித்தலையும் மேற்கொண்டு வரும் சிறார்கள் மற்றும் அவர்களது பெற்றோர் உட்பட பலர் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டார்கள். Sai Autism Learning Centre நிறுவனத்தின் நிறுவனர் சத்தியா சுரேஸ் அவர்களது ஆற்றல் கற்பித்தல் திறன் ஆகியவற்றையும் தங்கள் பிள்ளைகளின் திறன் வளர்ச்சி ஆகியவை தொடர்பாக அன்னையர்கள் சிலர் மிகுந்த திருப்தியோடு எடுத்துரைத்தார்கள்.
பத்திரிகைத்துறை மற்றும் ஊடகத்துறை சார்ந்தவர்களான ‘உதயன்’ லோகேந்திரலிங்கம்- யுகம் வானொலி- கணபதி ரவீந்திரன்- ‘நினைவுகள்’ கனா ஆறுமுகம் ஆகியோர் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.
85 Dynamic Drive -Unit 2A Scarborough என்னும் விலாசத்தில் அமைந்துள்ள இந்த Sai Autism Learning Centre நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள 647 444 4033 என்னும் இலக்கத்தை அழைக்கவும்