குமுளன்
கடந்த 13.04.2025 ஞாயிற்றுக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு வன்னிச்சங்க மண்டபத்தில் தலைவர் இரத்தினசிங்கம் சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வைத் தொகுத்து வழங்கினார் கலாநிதி பார்வதி கந்தசாமி அவர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்தை திருமதிகள் நந்தினி உருத்திரேஸ்வரன் மற்றும் கவிதா ரமேஸ் இசைத்தனர். தொடர்ந்து செல்விகள் ஆதியா மற்றும் ஆரபி ரமேஸ் இசைத்ததைத் தொடர்ந்து அக வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பமானது.
வரவேற்புரையை திருமதி நந்தினி உருத்திரேஸ்வரன் நிகழ்த்தினார். தொடரந்து வாழ்த்துரை தெரிவித்த பிரபல எழுத்தாளர் அண்ணாமலை பாலமனோகரன் அவர்கள் புத்திசிகாமணியின் எழுத்தாற்றலையும் அவரது மண்பற்றையும் விதந்துரைத்ததோடு நான்பார்த்த நந்திக்கடலை யதார்த்தமாக அனைவரது கண்முன்னே கொண்டுவந்துள்ளமையும் அங்குள்ள மக்களின் வாழ்வியலைப் படம்மபிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் போர்க்காலத்தில் அந்த கடலில் மிதந்து உடலங்களும் இரத்த ஆறும் உள்ளத்தை உருக்குவதாக எடுத்துரைத்து புத்திசிகாமணியின் ‘நான் பார்த்த நந்திக்கடல் அவருடைய சொந்த ஊரான வட்டுவாகலை எம்மனக்கண் முன்கொண்டுவந்து நிகழ்த்துவதன் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற அவருடைய மக்களும், அவர்களுடைய சந்ததிகளும் தம்முறை ஊரை என்றும் மறவாது வாழ்வது மட்டுமல்ல அவ்வூர் மக்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்து வருகின்றார். அவர் சுகநலமாக இருந்து தொடர்ந்து பணியாற்றவேண்டும் என வாழ்த்தினார்.
தொடர்ந்து கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அவர் வன்னியைப் பற்றி நான் அறிந்ததைவிட இன்று பலவற்றை அறியமுடிகின்றது. வன்னி மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக்காட்டும் நூலாக அமைந்துள்ளமை பாராட்டத்தக்கது. நானும் வன்னியில் பிறந்தவள்தான். ஆனால் வன்னிபற்றிய தேடல்கள் இன்று எமக்கு வன்னிபற்றி அறிய வன்னியியல் ஆய்வு மன்றம் செயற்பட்டு வருவது பாராட்டத்தக்கது. அத்தோடு புத்திசிகாமணி; தொடர்ந்தும் எழுத வேண்டும் என வாழத்துரை வழங்கினார்.
கருத்துரை தெரிவித்த முனைவர் பார்வதி கந்தசாமி பௌத்த ஆலயங்கள் அங்கங்கு முளைக்கின்றன. தமிழர்கள் பௌத்தர்களாக இருந்துள்ளனர் என்னும் உண்மை வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. இவற்றைப் புத்திசிகாமணி போன்றோர் வெளிக்கொண்டுவரவேண்டும் என்றார். தொடர்ந்து அவர் புத்திசிகாமணியின் அண்ணா சேதுபதி எங்கள் பாடசாலையில் வந்து கும்மி நடனம் கற்றுத்தந்தது நினைவிருக்கின்றது. நல்லதொடு கலைக்குடும்பம் அவரது நான்பார்த்த நந்திக்கடல் வட்டுவாகலைப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. என்னோடு படித்த பார்வதி வடிவேலு வட்டுவாகலைச் சேர்ந்தவர் அவர் மிக நெருக்கமாக இருந்தவர் என்று ஊரின் வரலாறு விரிவாகப்பதிய புத்திசிகாமணி முயற்சிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தலைமையுரையாற்றிய சிவகுமாரன் இரத்தினசிங்கம் வன்னிச்சங்கம் மக்களின் நலன் சார்ந்து செயற்படுகின்றது. கனடாவிலும் புலத்திலும் நாம் உதவி வருகின்றோம். இவ்வித நூல் வெளியீடுகளை செய்வதானால் எங்களை நாடுங்கள் நாம் அனைத்து ஒழுங்குகளையும் செய்துதத்தாயாரக உள்ளோம் எனவும் உரைத்ததோடு நந்திக்கடல் தான் வாழ்ந்த மண்ணின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் அருமையான படைப்பு அவர் தொடர்ந்து மேலும் பல படைப்புக்களை தரவேண்டும் எனவும் உரைநிகழ்த்தினார்.
நூலாசிரியரை அறுமுகப்படுத்தி உரைநிகழ்த்திய சபா இராசேஸ்வரன் வட்டுவாகலில் சாதாரண குடும்பத்தில் பிறந்து அங்கு ஆரம்பக்கல்வியைக் கற்று பின்னர் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் வரை கற்றவர். பல்வேறு முன்னேற்றகரமான வேலைத்திட்டங்களைத் தீட்டி அப்பிரதேச இளைஞர்களை ஊக்குவித்துவந்தர்.
விளையாட்டு குழுக்களிலும் நாடக அரங்கங்களிலும் ப்ஙகுகாண்டவர். அவரின் மூத்த சகோதரர் சேதுபதியின் வழிகாட்டலில் கலைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்டு உழைத்தவர். பின்னாளில் வீரகேசரி செய்தி நிருபராகச் செயற்பட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகள் பற்றியும் முறைகேடுகள் பற்றியும் எடுத்துக் கூறி பத்திரிகைகளில் முக்கிய செய்திகளை வெளியிட்டவர். சுமூகம் சார்ந்த இவரது செயற்பாடுகளால் இவர் இராணுவத்தின் சித்திரவதைக்கும் ஆளானாவர் அவர் பல நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்தும் எழுதவேண்டும் எவும் வேண்டிக்கொண்டார்.
தொடர்ந்து அவரது ஊரவரான சட்டத்தரணி முத்தையா பாலாச்சந்திரன் வெளியீட்டுரையை நிகழ்த்துகையில் புத்திசிகாமணியின் இளமைக்காலத்து செயல்கள் பற்றிச்சிலாகித்ததோடு தன்மையும் விமைளயாட்டுக் குழவில் இணைத்துக்கொண்டவர் எனப்பாராட்டி இளமைக்காலத்து நினைவுகளை மீட்டுரையாற்றியதோடு நந்திக்கடலில் நடந்த வாழ்வியல் நடவடிக்கைகளை நானும் பார்த்துள்ளேன். என எடுத்துரைத்து நூலை வெளியீடு செய்துவைத்தார். அதனை கலாநிதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் மற்றும் செல்வி குமுதினி, சபா இராசேஸ்வரன், கனகசீலன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து ஆய்வுரை நிகழ்த்திய த.சிவபாலு வட்டுவாகல் பற்றிய அரியதொரு வரலாற்றுப்படைப்பாக இது உள்ளது. இதனை சிறுகதை என்பதா பெருங்கதை என்பதா அல்லது நவீனம் என்பதா அல்லது வராற்றுத் தொகுப்பு என்பதா என்பதில் எனக்கு வித்தியாசமான பார்வை உண்டு என்றவர் இதனை நான் ஒரு வராற்று ஆவணமாகவே பார்க்கின்றேன்.
முள்ளிவாய்க்கால் வலயன்பமடம், பொக்கணை,சுண்டிக்குளிமட்டுமல்ல முல்லைத்தீவில் கடை வைத்திருந்தவர்கள் பற்றிய விபரங்களையும் முன்னர் இருந்த மலசல சுத்திகரிப்புப் பற்றியும் பதிவிட்டுள்ளார்.
அத்தொழிலாளர்களின் பணிகள் மாற்;றியமைக்கப்பட்ட நிலைமைகளையும் எடுத்துரைத்துள்ளார். எனக்குறிப்பிட்ட அவர் வட்டுவால் முத்தையா ஆசிரியர் என்னைப் பயிற்றுவித்தவர் அத்தோடு என்னோடு சக ஆசிரியராகவும் பணியாற்றியவர். அவரிடமிருந்து வட்டுவாகல் சப்தகன்னியர் வரலாறு மற்றும் அங்கு வாழும் மக்களின் வரலாறு போன்றவை பற்றி எழுத உதவிகோரலலாம். சண்முகம் ஆசிரியர் முல்லைத்தீவு சைவப்பாடசாலையில் பணியாற்றியவர். சிதம்பரப்பிள்ளை குமளமுனையில் காணி அதிகாரியாகப் பணியாற்றியவர்.
பார்வதி என்னோடு கற்றவர் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருவரும் செயலாற்றியவர்கள். முல்லைத்தீவின் கடல்தொழில் சம்மாட்டியார், மீன், கருவாடு கொழும்புக்கு ஏற்றுதல், சீதணம் கொடுத்துச் சீரழிந்த துரையர் பற்றியும் விவரித்துள்ளமை மக்கள் வாழ்வியலன் நிதர்சனம். எமது ஊரில் உள்ள தண்ணிமுறிப்புக் குளத்தின்கீழ் ஒரு கண்டம் வட்டுவாகலார் கண்டம் எனப்படும் அவர்கள் குமளமுனையார் கண்டத்திற்கு முன்னரான பகுதியில் வயல்கள உடையவர்கள். வட்டுவாகல் மக்களின் வாழ்வியiலை நான் நன்கு அறிந்திருந்தேன் என்றாலும் மட்டி சுட்டுக்சாப்பிடும் பழக்கத்தை இந்த நூலில் அறிந்துகொண்டேன். முல்லைத்தீவில் கற்பித்த வேளை வட்டுவாகல் மாணவர்கள் என்னிடம் படித்தது மட்டுமல்ல விளையாட்டுக்களகங்கள் மூலம் பல இளைஞர்களோடு பழகும் வாய்ப்பும் ஏற்பட்டது. முல்லைத்தீவும் வட்டுவாகலையும் பிரிக்கும் ஒரு சிறிய நீரோடை உண்டு.
அது மாரியில் சற்று பெருக்கெடுத்து ஓடும். கோடையிலர் நீற்வற்றி தேங்கிநிற்கும். வட்டுவாகல் பாலத்தைக் கட்டியவர் அடங்கத்தமிழன் எனப்பட்ட சி.சுந்தரலிங்கம் ஆவர். ஆதனால் புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால், மாத்தளன் பொக்கணை போன்ற இடமத்து மக்களுக்கு அது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது அது ஒரு வரலாற்றுப்பதிவாகும். இதனை புத்திசிகாமணி பதிவிட்டுள்ளார். வட்டுவாகல் விவசாயம், கடல்வளம் மட்டுமல்ல பறவைகள் பற்றியும் அழகாக எழுததியுள்ளார் என்றதோடு வட்டுவாகல்பற்றி ஒரு தொகுப்பு நூலை எழுதவேண்டும் என்னும் வேண்டுகொளையும் விடுத்தார்.
தொடர்ந்து பொன்.புத்திசிகாமணிக்கு நண்பர்கள் பொன்னாடை போர்த்தித் தங்கள் அன்பைத் பரிமாறிக்கொண்டனர்.
தனது ஏற்புரையில் அனைவருக்கும் நன்றியறிதலைத் தெரியத்தந்ததொடு தான் உண்மையில் கண்டவற்றை எழுதினேன் எதனையும் ஒழிவுமறைவின்றி எழுதுவதே சரியென எனக்குப் பட்டது. எம்மவர்களின் வாழ்வியலை மட்டுமல்ல இளமையில் சிறுவர்களாக இருந்த வேனை எதனைச் செய்தோமோ அவற்றை நான் எழுதியுள்ளேன். குளிக்கும்போது ஆண் உறுப்மை மறைக்கக்கட்டப்படும் துண்டை ‘கோமணம்’என்று அழைப்பதை குறிப்பிட்டுள்ளார். அதனைச் சிலல் ‘கவிஞனம்’ என்றும் அழைப்பர் எனவும் தான் முன்னர் எழுதிய சொர்ணம்மா, சின்னாச்சிக்கிழவி ஆகியவற்றில் எமது ஊர்பற்றி விரிவாக எழுதியுள்ளேன் என நகைச்சுவை ததும்ப உரையாற்றினார். அவரது நகைச்சுவை நிறைந்த சபையோரின் சிரிப்பொலியின் மத்தியில் மிக நகைச்சுவையாக உரையாற்றினார்.
தொடர்ந்து வன்னிச்சங்கத்தின் செயலாளர் சிவபாதம் இரத்தினாகரன் அனைவருக்கும் நன்றியுரை தனித்தனியாகக் குறிப்பிட்டு உரையாற்றியதோடு விழா சிறப்புற நிளைவெய்தியது. தோடர்ந்து அனைவருக்கும் நூல்கள் வழங்கப்பட்டன.