ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே 3 ஆண்டுகளை கடந்து போர் நடைப்பெற்று வருகிறது. இதில் அமெரிக்கா தலையிட்டு போரை உடனடியாக நிறுத்த இரு நாடுகளையும் வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று உக்ரைனின் தலைநகரில் தென்கிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் மீது ரஷியா சரமாரி டிரோன் தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் குழந்தை மற்றும் 76 வயது பெண் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 10 படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்து ”தாக்குதலை நிறுத்துங்கள் புதின்” என்று கூறியிருந்தார். அதையும் மீறி ரஷியா மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.