பு.கஜிந்தன்
ஈழத்து தமிழியல் த.சண்முகசுந்தரம் தமிழியல் சுவடுகள் நூற்றாண்டு விழாக்கால நூல் வெளியீடானது சனிக்கிழமை 26ம் திகதி அன்றையதினம் தெல்லிப்பழையில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கம் தலைமையில் இந்த நூல் வெளியீடானது நடைபெற்றது.
நிகழ்வில் விருந்தினர்களின் உரைகள் இடம்பெற்றது. வெளியீட்டு உரையினை அளவெட்டி அருணோதயா கல்லூரியின் ஆசிரியர் சி.ரமேஷ் ஆற்றிய பின்னர் நூல் வெளியீடானது நடைபெற்றது. முதல் பிரதியை திரு.ச.அருள்முருகனார் வழங்கி வைக்க அதனை நிகழ்வின் தலைவர் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அறிஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.