கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பணியாற்றியவர் நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. “மகாராஜா, சூரரை போற்று, ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்பிரமணி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளார். இந்த நிலையில், நடிகர் கே.பி.ஒய் பாலா அவருக்கு ரூ. 75 ஆயிரம் பணம் கொடுத்து உதவி செய்துள்ளார். மேலும், மற்றவர்களும் அவருக்கு உதவ வேண்டும் எனவும் அவர் காணொளி வெளியிட்டு இருக்கிறார்.
