தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘ஹிட் 3 படத்தில் நானி நடித்துள்ளார். ஹிட் 3 படத்தை பிரபல இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியுள்ளார். பிரசாந்தி திபிர்னேனி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. ரத்தம் தெறிக்கும் கிரிமினல் ஜானரில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தில் நானி காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதே மே 1 ஆம் தேதி சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் வெளியாகிறது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. ரெட்ரோ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதரபாத்தில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்திராக நடிகர் விஜய் தேவரகொண்டா கலந்துக் கொண்டார். அதில் நடிகர் சூர்யா கூறியதாவது ” நானிக்கு சரிபோதா சனிவாரம், கோர்ட் திரைப்படத்தை தொடர்ந்து ஹிட் 3 திரைப்படமும் வெற்றியடையட்டும். நானி கூறியதைப் போல் மே 1 பார்ட்டி போல் இரண்டு திரைப்படங்களையும் கொண்டாடுவோம். மேலும் வீழ்வதில் தோல்வி இல்லை வீழ்ந்து எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் மீண்டும் எழுந்து சண்டைக்கு தயாராகி இருக்கிறேன் ” என கூறினார்.