(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்)
(27-04-2025)
உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் 26ம் திகதி சனிக்கிழமையன்று வெளியாகின.
அதில் கலை பிரிவில் மன்னார் கல்வி வலயத்தை சேர்ந்த மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.