யுபிஎஸ்சி தேர்வு முடிவில் மின்சார வாரியத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி பெற்றார்.
சிவில் சர்வீசஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு முடிவு கடந்த 22-ம் தேதி வெளியானது. இதில் 1,009 பேர் வெற்றி பெற்று இருப்பதாக தேர்வை நடத்திய யு.பி.எஸ்.சி. அதற்கான பட்டியலுடன் வெளியிட்டு இருந்தது. அந்த பட்டியலில் மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் டாக்டர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் 80-வது இடத்தில் இருக்கிறார். இதற்கு முன்பு அரவிந்த் ராதாகிருஷ்ணன் கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலில் 361-வது இடத்தை பெற்றாலும், பணியில் சேரவில்லை. இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான இந்த தேர்வில் பங்கேற்று 1,009 பேர் பட்டியலில் 80-வது இடத்துக்கு வந்துள்ளார். இந்த நிலையில், யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 80-வது இடம் பெற்று தேர்ச்சி பெற்ற மின்சார வாரியத்தலைவர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உடனிருந்தனர்.