வெளித்தோற்றத்தைக் கண்டு தமிழ் மக்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது. ஜேவிபி தலைமையிலான NPP (தேசிய மக்கள் சக்தி) உடன் இணைந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அர்த்தமுள்ள எதையும் செய்யவில்லை.
அவர்களது கட்சி ஆட்சிக்கு வந்தபோதும், தமிழ் அரசியல்கைதிகளின் பட்டியலை வெளியிடவோ அல்லது பகிரங்கமாக வெளிப்படுத்தவோ தவறிவிட்டனர், ஆனால் அவர்கள் இன்னும் இலங்கை சிறைகளில் கைதிகளாகவே உள்ளனர். இந்த எம்.பி.க்கள், காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்களின் தாய்மார்களையும் அன்பானவர்களையும் ஒரு போதும் சென்று பார்த்ததில்லை.
இன்று, NPP இன் கண்காணிப்பின் கீழ்:
– இலங்கை இராணுவம் இன்னமும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து, அச்சம் மற்றும் கட்டுப்பாடு நிறைந்த சூழலைப் பேணுகிறது.
– புலனாய்வு முகவர்கள் தமிழ் பொதுமக்களை தொடர்ந்து மிரட்டி, சுதந்திரமான கருத்து மற்றும் சிவில் வாழ்க்கையை நசுக்குகின்றனர்.
– தமிழ் சமூகங்களை ஒடுக்கும் மற்றும் கண்காணிக்கும் இராணுவக் கட்டமைப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
யதார்த்தம் தெளிவாக உள்ளது: ஜே.வி.பி-என்.பி.பி பதாகையின் கீழ் உள்ள தமிழ் எம்.பி.க்கள், தமிழர் தாயகத்தில் சிங்கள அரசின் அடக்குமுறைப் பிடியைத் தக்கவைப்பதில் மௌன ஒத்துழைப்பாளர்களாக இருந்து வருகின்றனர்.
தையிட்டி, வெட்டுக்குமரி போன்ற இடங்களில், மௌனம் காக்காமல், சிங்களக் கொள்கைகளுக்கு எதிராக தைரியமாக கிளர்ச்சிகளை உருவாக்கிய தலைவர்களுக்கும் அவர்கைளன் ஆதரவாளர்க்கும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
திருகோணமலையில் நடைபெற்ற ஊர்வலங்கள் மற்றும் போராட்டங்களின் போது சிங்கள பொலிஸாரின் தடியடிகளை தாங்கி பலமாக நின்ற தமிழ் தலைவர்களுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் வாக்களியுங்கள்.
சுதந்திரத்துடன், உண்மையான தமிழ்த் தலைமை மீட்கப்பட்டவுடனுன் தமிழர் நிலங்களை முதலீடு செய்து மீளக் கட்டியெழுப்புவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் டிரில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களுடன் தயாராக உள்ளனர்.
சிங்களக் கட்டுப்பாட்டில் உள்ள ஜே.வி.பி.யிடம் இருந்து சில லட்ச ரூபாய்களை பெற ஏமாறாதீர்கள்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு உண்மையான தமிழ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுங்கள் – சுதந்திரம், கண்ணியம் மற்றும் வளமான தமிழ் எதிர்காலத்திற்காகப் போராடும் தலைவர்கள்.
இது வெறும் தேர்தல் அல்ல – சிங்கள அடிமை பொருளாதாரம் மற்றும் ஊழல் கொள்கைகளில் இருந்து தமிழ் தேசத்தை விடுவிக்கும் பணியாகும்.
தைரியம், போராட்டம், ஒற்றுமை ஆகியவற்றின் மூலம், தலைமுறைகள் தியாகம் செய்த சுதந்திரம், கண்ணியம், செழுமை ஆகியவற்றை தமிழர்கள் அடைய முடியும்.