மறைந்த விஜய்காந்தின் மகனாவார் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் படை தலைவன் நடித்துள்ளார். “வால்டர்”, “ரேக்ளா” படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரைக்கடர்ஸ் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் வரி காணொளி சிலமாதங்களுக்கு முன் வெளியானது மற்றும் படத்தின் முன்னோட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் துள்ளல் காணொளியை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மே 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
