புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிரெஞ்சு தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டலானது விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதுவரை எந்த மர்ம பொருளும் கண்டுபிடிக்கவில்லை. இது வதந்தி என்று கூறப்படுகிறது. இப்பினும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
