கடந்த 22-ந் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரதமர் மோடியை ‘கயாப்’ (காணவில்லை) என்ற தலைப்புடன் சமூக ஊடகங்களில் காங்கிரஸ் பகிர்ந்த மோடியின் தலையில்லாத கேலிச் சித்திரம் வைரலாகியது. இதற்கிடையே காங்கிரஸ் பகிர்ந்த கேலிச் சித்திரத்துக்கு பாஜக தலைவர்கள் பலரிடமும் இருந்து கடுமையான கண்டனங்கள் வந்தன. பாஜக இந்த விவகாரத்தை பெரும் சர்ச்சையாக்கிய நிலையில் காங்கிரஸ் தனது பதிவை நீக்கியுள்ளது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமஷ், பஹல்காம் தாக்குதலில் யாரை டார்கெட் செய்வது நேர குழப்பத்தில் பாஜக உள்ளது. பயங்கரவாதிகள், பாகிஸ்தான், காங்கிரஸ் ஆகியவற்றில் பாஜக அரசு முதலில் பயங்கரவாதிகள் மற்றும் பாகிஸ்தானை தான் டார்கெட் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் காங்கிரசை டார்கெட் செய்வது அர்த்தமில்லாத பொறுப்பற்ற செயல். பஹல்காம் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு வழங்கும்” என்று தெரிவித்தார்.
