நடிகர் சூர்யாவின் 44-வது படமான ‘ரெட்ரோ’ படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ‘ரெட்ரோ’ படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ ரெட்ரோ படம் பெரிய வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருக்கிறார். அனிருத் தற்போது ‘கிங்டம்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடலின் புரோமோ இன்று வெளியாக உள்ளது. பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாகிறது.