தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் ‘ரெட்ரோ’ படம் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து சூர்யா தனது 45-வது படத்தில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தின் நிறைவு செய்த பின்னர் சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக ‘சூர்யா 46’ என்று பெரியடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இயக்க உள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை மிருணாள் தாகூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
