திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருச்சியில் இருந்து கொச்சிக்கு விமானம் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வருகிற 7-ந்தேதி முதல், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், திருச்சி – கொச்சி இடையே தினசரி விமான சேவையை தொடங்க உள்ளது. தினமும் மதியம் 12 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 1 மணிக்கு கொச்சி விமான நிலையத்தை சென்றடையும். கொச்சியில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் விமானம், மதியம் 2.40 மணிக்கு திருச்சி வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
